Wednesday, March 3, 2010

சிறையில் மே தினம் கொண்டாடிய வீராங்கனை

மார்ச் 1ம் நாள் அம்மாவின் நினைவு நாள். பொதுவாக எல்லோருக்கும் ஒரு தாய் தான் இருக்க முடியும். ஆனால் எனக்கு இருவர் தாயாக ஆனார்கள். ஒருவர், அன்னை லட்சுமி, என்னைப் பெற்றெடுத்த தாய். மற்றவர், ஜானகி அம்மா. என்னை வளர்த்த தாய். 1943ம் ஆண்டு வங்காளத்தில் கடும் பஞ்சம் ஏற்பட் டது. அப்போது பொன்மலை பாலர் சங்கம் வங்க மக்களைப் பாதுகாக்க வசூலில் இறங்கியது. நானும் என்னைப் போன்ற சிறுவர், சிறுமியர்க ளும் கும்மியடித்து உணவுப் பொருட்களையும், துணிமணிகள், மருந்துப் பொருட்கள் ஆகிய வற்றையும் வசூல் செய்தோம். இந்தச் சூழ்நி லையில்தான் ஜானகியம்மாள் திருச்சி பொன் மலைக்கு வந்தார்கள்.

விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்று திரும்பி வந்த அவரை பிரிட் டிஷ் அரசு, சொந்த ஊரான மதுரையில் தங்க அனுமதிக்காமல் திருச்சியில் தங்க உத்தர விட்டது. திருச்சி வந்த அவர்கள் பொன்மலை யில் தங்கினார்கள். குழந்தைகளாகிய எங்களி டம் மிகுந்த அன்புடனும் பரிவுடனும் நடந்து கொண்டார்கள். பாடல்களைப் பாடக் கற்றுக் கொடுத்தார்கள். பாரதியார், பாரதிதாசன், நாமக் கல் கவிஞர் ஆகியோரின் பாடல்களை இனி மையான குரலில் பாடிக்காட்டி, எங்களுக்கு பாட பயிற்சியும் அளித்தார். பனிரெண்டு வய தான எனக்கு அவர்கள் மேல் ஒரு ஈர்ப்பு ஏற் பட்டது. ஒரு தாயன்பை உணர்ந்தேன்.

ஜானகி அம்மா ஒரு சிறந்த தேசபக்தர், மாபெரும் விடுதலைப் போராட்ட வீரர். மேடை களில் தேசபக்திப் பாடல்களைப் பாடி சுதந் திரப் போராட்டத் தீயை வளர்த்தவர். அவர் தேசபக்திப் பாடல் பாடுவார் என்று அறிவிக் கப்பட்டால், மதுரையில் பல்லாயிரக்கணக் கான மக்கள் காங்கிரஸ் கூட்டங்களுக்கு வரு வார்கள். ஜானகி அம்மாள் 1936ல் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஆனார். பின்பு காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி உறுப்பினராகி, மதுரை கட் சியின் தலைவர்களில் ஒருவரானார். நேதாஜி மதுரையின் பல பகுதிகளுக்கு விஜயம் செய்த போது பசும்பொன் தேவரும், ஜானகியம்மாவும் அவருடன் சென்றனர். மதுரை தமுக்கம் மைதானத்தில் நேதாஜி பேசிய கூட்டத்திற்கு ஜானகி அம்மாதான் தலைமை வகித்தார்.

தென்னிந்தியாவின் முதல் பெண்

1939ல் மதுரையில் கம்யூனிஸ்ட் கட்சி கிளை உருவாக்கப்பட்ட போது அதில் ஜான கியம்மாள் தன்னை இணைத்துக் கொண்டு செயல்பட்டார். 1939ல் பொன்மலையில் யுத்த எதிர்ப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டு திரும்பிய அவரை ஆங்கில அரசு கைது செய்து 6 மாதம் சிறையிலடைத்தது. யுத்த எதிர்ப்புப் பிரச்சாரத்திற்காக தென்னிந்தியாவிலேயே முதன்முதலாக சிறைப்பட்ட பெண் அரசியல் வாதி அம்மாதான். கம்யூனிஸ்ட் இயக்கங்க ளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு ஒரு தியாகச் சீலராகத் திகழ்ந்தார். பலமுறை சிறை சென்றார். பெண் தொழிலாளர் களுக்கு அரசியல் உணர்வு ஊட்டி, அவர் களை அரசியல் இயக்கத்தில் ஈடுபாடு கொள் ளச் செய்வதில் ஜானகியம்மாளுக்குப் பெரும் பங்கு உண்டு. கட்சியின் முடிவுப்படி 1944ம் ஆண்டு கடைசியிலிருந்து மதுரை மாவட்டத் தில் விவசாயிகள் சங்கத்தை உருவாக்கும் வேலையில் அம்மா ஈடுபடத் துவங்கினார்.

சுதந்திரம் அடைந்த பின் கம்யூனிஸ்ட் கட் சியின் மீது கடும் அடக்குமுறை ஏவப்பட்டது. ஜானகி அம்மா மற்ற தலைவர்களுடன் சேர்ந்து கைது செய்யப்பட்டார். பின் 1951ல் விடுதலை யானார். 1962ல் இந்திய-சீன எல்லைப் பிரச் சனையில், அரசியல் ரீதியான பேச்சுவார்த் தையின் மூலமாக பிரச்சனைகளுக்கு சுமூக மான தீர்வு காண வேண்டுமென்ற கட்சியின் நிலைபாடு காரணமாக, நாம் சீனாவுக்கு ஆதர வாக இருக்கிறோம் என்ற பொய்ப்பிரச்சாரத் தை அரசு கட்டவிழ்த்துவிட்டு, நமது கட்சியின் தலைவர்களையும், தொண்டர்களையும் கைது செய்து சிறையிலடைத்தது.

சிறையில் மே தினம்

நானும், ஜானகி அம்மாவும் கைது செய்யப் பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட் டோம். மீண்டும் 1964ம் ஆண்டு டிசம்பர் மாதம் நாங்கள் இருவரும் கைது செய்யப்பட்டு பாதுகாப்புக் கைதிகளாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டோம். சிறையிலேயே ஜான கியம்மாள் முன்முயற்சியில் மே தினம் கொண்டாடப்பட்டது. நான் ஜானகியம்மா வைத் தாயாக பாவித்தது போல், என் குழந்தை களும் அவரைப் பாட்டியாகப் பாவித்தனர். சிறையிலிருக்கும் போது எனக்கு அவர்கள் எழுதும் கடிதங்களில் ஜானகிப் பாட்டி என்று குறிப்பிட்டு நலம் விசாரிப்பார்கள். அம்மாவு டன் நானும் சிறைப்பட்ட அனுபவம் இன்று என் நினைவில் பசுமரத்தாணி போல் நிற்கிறது.

பாதுகாப்புக் கைதிகளாக நாங்களிருவ ரும் வேலூர் சிறையில் இருந்தபோதுதான் கண்காணிப்பாளர் ஒருவர் “உங்கள் இயக்கத் தில் நீங்கள் இரண்டு பெண்கள் மட்டும்தானா, வேறு யாருமில்லையா?” என்று கேட்டது எங்களிருவருக்கும் பெண்களை ஸ்தாபன ரீதியாக ஒன்று திரட்ட வேண்டுமென்ற முடி வுக்கு இட்டுச் சென்றது. 1973ம் ஆண்டு டிசம் பரில் தமிழக ஜனநாயக மாதர் சங்கம் திண் டுக்கல்லில் மலர்ந்தது. 1974ம் ஆண்டு மது ரையில் நடைபெற்ற மாநாட்டில் ஜானகியம் மாள் தலைவராகவும் நான் பொதுச் செய லாளராகவும் தேர்வு செய்யப்பட்டோம். பல ஆண்டுகள் இணைந்து பணி செய்தோம்.

ஜானகி அம்மா ஒரு மாபெரும் சுதந்திரப் போராட்டத் தியாகி. அவர் ஒரு போர்க் குண மிக்க கம்யூனிஸ்ட். நாட்டின் சுதந்திரத்திற் காகவும், நாடு விடுதலையான பின் பாதுகாப் புக் கைதியாகவும் பலமுறை சிறை சென்று வரலாறு படைத்தவர். பெண்களை அரசியல் இயக்கத்திற்கும், விவசாயிகள் இயக்கத்திற் கும், தொழிற்சங்க இயக்கத்திற்கும் கொண்டு வந்தது அவர் ஆற்றிய சிறப்புக்குரிய பணியா கும். அவர் 1992ம் ஆண்டு மார்ச் 1ம்நாள் நம் மை விட்டுச் சென்றுவிட்டார். அவரது நினைவு நாளைக் கொண்டாடுவதன் மூலம், அவரது வாழ்க்கை வரலாற்றைச் சொல்வதன் மூலம் இன்றைய இளைஞர்களுக்கு, குறிப்பாக பெண்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வை ஏற் படுத்த வேண்டும்.